*உன் உள்ளம் நேசிப்பதை
நீ
மறந்து விடலாம்
ஆனால்.....
உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க
முடியாது..!
*பிரிவு என்பது யாராலும் தாங்க முடியாத வலி
நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்
*வாழ்க்கை ஒரு கண்ணாடி அதன் முன்னால் நீ அழுதால் அதுவும் அழும் நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும் முடிவு உன் கையில்
*என்னதான் ஒருவர் புத்திசாலியாக இருந்தாலும்,
பல் தேய்க்கிறபோது இழிச்சவாயனாகத்தான் இருப்பார் .
*ஒருதலை காதலென்று
ஓரங்கட்டி விடாதே - அன்பே
இதயங்கள் ஒன்றாகிவிட்ட பின்னர்
இரு தலைகள் எதற்கு நம் காதலுக்கு
*தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது தொடுதலின் அர்த்தங்களை
எந்தமொழி பேசிவிடும்!
*
*உன் முகம்
காண நினைத்தேன்
முடியவில்லை
உன்னை நேசிக்க
நினைத்தேன் அதுவும்
முடியவில்லை
*இதயத்தில் இருந்தால்
இரக்கக் குணம்
இவருக்கு விட்டுக்கொடுக்கலாமே
என்றுத் தோன்றும்!
இதயத்தில் இருந்தால்
கருணை
உதவிசெய்யலாமே என்று
உள்ளம் உணர்த்தும்!
மதிப்பு ஏற்பட்டு விட்டால்
உள்ளத்தில்
கௌரவம் தோன்றும்
அவர் மேல்!
நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால்
உறுதியோடு செயற்பட
உள்ளம் தயாராகும்!
அன்பு ஏற்பட்டு விட்டால்
அவருடன்
நெருக்கத்தை உண்டாக்கும்!
அழகு என்று
முடிவு செய்து விட்டால்
ரசிக்கத் தொடங்கி விடும் மனம்!
இவை எல்லாம்
இருக்கும் இடத்தில்
காதல் தொடங்கி விட்டால்!
உறவு உறுதியாகிவிடும்!
இவை எல்லாம் இருந்து
ஏற்படும் உறவால்
இணைந்தால் இல்வாழ்க்கையில்!
இவ்வுலகையே
ஜெயித்து நிற்கும்
உன் வாழ்க்கை!
* நண்பனுடன் நம்பியே நீ நடைபோடு - அவன்
கண்டவழி போனால் அங்கே தடைபோடு - முங்கிக்
குளித்தாலும் காக்கை வெளுக்காது - சில
லொங்குக் கூட்டம் ஒருபோதும் திருந்தாது
நண்பனாலே நற்குணங்கள் வரவேண்டும் - அவன்
துன்பம் என்று வரும்போதுன் தோள் வேண்டும்
உண்மை நட்பை ஏதும் வந்து முறிக்காதே - உன்னை
ஒருபோதும் அகழியில்ப் பொறிக்காதே
உயர் நட்பில் சுயநலம் கலக்காது - உன்னை
தன்னுடனே மாட்டிவிட நினைக்காது
நல்ல நட்பை மதிக்கோணும் கெட்ட நட்பைத் தொலைக்கோணும்
நல்ல நண்பன் கூட வந்து உன்தன் வாழ்வு செழிக்கோணும்
* உனக்கு
என்னைப்
பிடித்திருக்கிறதா
என்று தெரியாது!
ஆனால்
எனக்கு
உன்னை மட்டும் தான்
பிடித்திருக்கிறது!
உனக்கு
நான்
எப்படியோ
தெரியாது!
ஆனால்
எனக்கு
நீ தான்
எல்லாமே!
உன் உலகத்தில்
நான்
இருக்கிறேனா
தெரியாது!
ஆனால்
என்
உலகமே
நீ தான்!
நீ
என்னைக்
காதலிக்கிறாயா
என்று தெரியாது!
ஆனால்
நான்
உன்னை மட்டும் தான்
காதலிக்கிறேன்!
* வீதியின் ஓரமாய்- வாழ்க்கை
இங்கு நடக்குதம்மா
வானம் பார்த்த பூமியைப்போல்
வீடும் ஆகிப்போனதம்மா
*பாயும் அம்பு விழிகள் நீ
பருவகாலத் தோட்டம் நீ
வார்த்தை வீசும் தென்றல் நீ
வசந்த காலப் பருவம் நீ
*கோடி கோடியாய்
பிறக்கும்
இப்பூவுலகில்
நீ
கோபுரகலசமாகவேண்டும்
*